இந்தியாவிற்குள் நுழைந்தது பியாஜியோவின் புதிய ஸ்கூட்டர்

0
837
limited edition vespa notte launched india

(limited edition vespa notte launched india)
பியாஜியோ நிறுவனத்தின் புதிய ரக வெஸ்பா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேரியன்ட் வெஸ்பா நோட் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வெஸ்பா LX 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. (limited edition vespa notte launched india, Tamil News)

இந்தியாவில் வெஸ்பா நோட் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலிய மொழியில் நோட் என்றால் இரவு என அர்த்தம் என்ற வகையில், புதிய வெஸ்பா நோட் முழுமையாக கருப்பு நிற தீம் கொண்டிருக்கிறது.

வெஸ்பா நோட் ஸ்கூட்டர் மேட் பிளாக் நிறம் மற்றும் க்ரோம் பாகங்கள் மற்றும் அலாய் வீல்களும் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையாகும் ஸ்டான்டர்டு வெஸ்பா மாடலை விட பார்க்க அழகாகவும், மிக நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

Tamil News Group websites

limited edition vespa notte launched india