பிரான்ஸில், போக்குவரத்து தடை வெள்ளிக்கிழமை வரை தொடரும்!

0
95
France traffic hike continue until Friday

கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை 27) மொம்பர்னாஸ் நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து தடை, எதிரவரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என SNCF அறிவித்துள்ளது. France traffic hike continue until Friday

மின் வழங்கி திடீரென தீப்பற்றிக்கொண்டதால், மொன்பர்னாஸ் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

ரயில் நிலைய திருத்தப்பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு முன்னதாக இன்று செவ்வாய்க்கிழமை சேவைகள் வழமைக்குத்திரும்பும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை வரை சேவைகள் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முற்றாக சேவைகள் வழமைக்குத்திரும்ப அடுத்த திங்கட்கிழமை ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை மட்டும் 115 ரயில்கள் போதிய மின்சார வசதி இல்லாமையால் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இரண்டில் ஒரு ரயில் மாத்திரமே இயங்கும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர, சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமைக்குள் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

tags :- France traffic hike continue until Friday

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்