உலகின் வயதான பெண்மணி மரணம்

0
313
Japan woman world died age 117 Sio Mioko old

உலகில் வயதான ஜப்பானைச் சேர்ந்த பெண்மணியான சியோ மியோகோ தனது 117 வது வயதில் மரணம் அடைந்துள்ளார். (Japan woman world died age 117 Sio Mioko old)

சியோ மியோகா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அவரது சொந்த ஊர் அமைந்துள்ள கனகவா மாகாண அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.

மியாகோ மே மாதம் 20 ஆம் தேதி 1901 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் உலகின் வயதான பெண்மணியான நபரான நமி டாஜிமா உயிரிழந்த பின்னர், மியாகோ உலகின் வயதான பெண்மணியானார்.

சியோ மியோகோவின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, “அவர் எங்களுக்கு தெய்வம், பிறருடன் அன்பாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வார். அவர் ஒரு பரப்பரபான நபராகவே இருந்தார். அவர் மிகுந்த சுவையான உணவுகளையே அதிகம் உண்பார்” என்று தெரிவித்துள்ளனர்,

உலகின் வயதான பெண்மணியாக சியோ மியோகோவை கின்னஸ் அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருந்த நிலையில் மியாகோ மரணம் அடைந்திருக்கிறார்.

tags :- Japan woman world died age 117 Sio Mioko old

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்