உள்ளூராட்சி தேர்தலை முடிவினை நினைத்து மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகிறது

0
408
Prasanna said information released President his salary false

உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட பாதகமான பெறுபேற்றினை அடிப்படையாக கொண்டு மாகாண சபை தேர்தலை நடத்த இழுத்தடிப்பு செய்யப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. government fear provincial election join opposition blame

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியின் காரணமாக மாகாண சபை தேர்தல்களையும் அரசாங்கம் திட்டமிட்டு காலம் தாழ்த்துகின்றது.

இதனை மக்கள் நன்கறிந்துக்கொண்டுள்ளனர் என்பதோது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தினாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு கூட்டு எதிர்கட்சி தயாராகவேவுள்ளது.

தற்போது மீண்டும் பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இந்த வாரம் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

எனவே மீண்டும் அடுத்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. தேர்தலை காலம் தாழ்த்துவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது.

தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமை நாட்டிற்கு பொருத்தமற்ற அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராகவே அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
government fear provincial election join opposition blame

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites