தி.மு.க. தலைவர் கருணாநிதி சிறுநீரக தொற்றால் பாதிப்பு – நலமுடன் இருப்பதாக ஓ.பி.எஸ் பேட்டி

0
554
TAMIL NEWS Karunanidhi sick home staying OPS DMK ADMK meeting

(TAMIL NEWS Karunanidhi sick home staying OPS DMK ADMK meeting)

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.

வயோதிபம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

மருத்துவக் குழுவினர் வீட்டிலேயே இருந்து அவர்களை கவனித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர்.

அங்கு ஸ்டாலின் உடன் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு அவர்கள் 15 நிமிடத்தில் புறப்பட்டனர். சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், கருணாநிதியை சந்தித்து பேசினோம்.

விரைவில் அவர் குணமடைவார் என தெரிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வமும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உடல் நலக் குறைவின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

அவர் மூச்சு விடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாயும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த வாரம், ட்ராக்யோஸ்டமி குழாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டது.

இதற்குப் பிறகு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.

புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் பயப்படும் வகையில் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில், கருணாநிதிக்கு சிகிச்சையளித்துவரும் காவிரி மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில் அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைக் குணப்படுத்த தேவையான மருந்துகள் தரப்பட்டுவருவதாகவும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனைக்கான வசதிகள் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரைக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(TAMIL NEWS Karunanidhi sick home staying OPS DMK ADMK meeting)

#Karunanidhi #OPS #DMK #ADMK

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites