ராஜபக்ஷக்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தொகை : வெளியிட்டது அரசாங்கம்

0
985
mahinda rajapaksa foreign bank details

ராஜபக்ஷ குடும்பத்தினரின் பெயர்களில், வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் வைப்பிலப்பட்டுள்ள பணத் தொகை சிலவற்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.(mahinda rajapaksa foreign bank details,Tamilnews)

ராஜபக்ஷ குடும்பத்தினரின் பெயர்களில் ஹொங்கொங், டுபாய் வங்கிகளில் பேணப்பட்டு வரும் கணக்கு விபரங்களையே அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளியிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களில் டுபாயில் மூன்று வங்கி கணக்குகளில் 1086 மில்லியன் அமெரிக்க டொலர் பணமும், மற்றுமொரு வங்கிக் கணக்கில் 500 மில்லியன் டொலரும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஒருவரது கூட்டு வங்கிக் கணக்கில் 1800 மில்லியன் டொலர் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் வங்கிகளில் ராஜபக்ச குடும்பத்தினர் வைப்புச் செய்துள்ள பணம் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகம் இந்த வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை பெற்றுக் கொள்வதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவருவது சற்று கடினமான விடயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mahinda rajapaksa foreign bank details,mahinda rajapaksa foreign bank details,mahinda rajapaksa foreign bank details,