வாதுவையில் அரைநிர்வாணத்துடன் பெண்களை கட்டிப்பிடிக்கும் கிறீஸ் மனிதன்

0
868
greaseman wadduwa area fearing People

வாதுவை பிரதேசத்தில் பொஹத்தரமுல்லை, பொதுபிடிய, கம்மனயாவத்தை கிராமங்களில் இரவு நேரங்களில் குடியிருப்புக்களுக்குள் நடமாடும் கிறீஸ் மனிதனினால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது. (greaseman wadduwa area fearing People)

கருப்பு நிற குட்டையான காற்சட்டை மாத்திரம் அணிந்துவரும் இந்த கிறீஸ் மனிதன் இரவு நேரங்களில் வீடுகளிலுள்ள இளம் பெண்களைக் கட்டிப்பிடிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் பொஹத்தரமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் பரிசோதகர்கள் தம்பதிகள் வசிக்கும் வீடொன்றில் புகுந்த இந்த கிறீஸ் மனிதன் பெண் பொலிஸ் பரிசோதகரின் காலை பிடித்து இழுத்துள்ளார்.

இதன்போது குறித்த பெண் சத்தமிடவே கிறீஸ் மனிதன் தப்பியோடியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இரவில் நடமாடும் இந்த கிறீஸ் மனிதன் தொடர்பாக வாதுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; greaseman wadduwa area fearing People