முதுகெலும்பு உள்ள ஒருவரே ஞானசார தேரருக்கு வேண்டுமாம்!

0
550

முதுகெலும்புள்ள ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளார். Gnanasara Thero Statement Next Presidential Election Candidate Tamil News

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர் சர்வாதிகாரியா? அல்லது ஜனநாயகவாதியா? என்பது குறித்து தமக்குப் பிரச்சினையில்லை என்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் போகம்பரை சிறைச்சாலைக்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஞான சார தேரர் அங்கு மேலும் கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார்? என்பது தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியினர் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். நமக்கு தனிநபர்கள் யார் என்பது முக்கியமில்லை. நாட்டை சரியான திசைக்கு கொண்டு செல்ல கூடிய முதுகெலும்புள்ள ஒருவர் நமக்கு தேவை.

அத்துடன் மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites