சீனா – இந்தியா இழுபறியால் முடங்கிப்போய்யுள்ள வீட்டுத்திட்டம்!

0
488

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர இழுபறிகளால் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.China India Diplomacy Issue 50000 House Scheme Delay Tamil News

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை அடுத்தவாரம் அதிகார பூர்வ அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவிக்கும் போது,

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை, ஒரு வீட்டை இந்தியா 2.2 மில்லியன் ரூபாவுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருந்தது.

ஆனால், 1.3 மில்லியன் ரூபாவுக்கு கட்டிக் கொடுக்க சீனா முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை சீனாவுக்கு வழங்குவதை இந்தியா எதிர்க்கிறது.

இந்த இராஜதந்திர மோதல்களால் இதுகுறித்து முடிவெடுக்க முடியாதுள்ளது. எனினும், இரண்டு தரப்புகளுடனும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்துவார். ஏனென்றால், இரண்டுமே எமது நட்பு நாடுகள்.

இந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்த்துக் கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. அரசாங்கத்தின் பிரதான கரிசனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தான் என கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே ராஜித இந்த விடயங்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites