பிரான்ஸ் சிறையில் இருந்து தப்பித்த முக்கிய தேடப்பட்டுவரும் குற்றவாளியான Redoine Faïd, கண்காணிப்பு கமரா ஒன்றில் பதிவாகியுள்ளான். France culprit Redoine Faid recorded CCTV tamil news
கடந்த ஜூலை 1 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை சிறையில் இருந்து ஆயுததாரிகளின் உதவியுடன் தப்பிச்சென்ற Redoine Faïd, நேற்று செவ்வாய்க்கிழமை Val d’Oise பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா ஒன்றில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sarcelles பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இருந்து ஆயுதங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. காரில் பயணித்தவர் குறித்த கண்காணிப்பு கமராவின் காணொளிகளை காவல்துறையினர் ஆராய்ந்தபோது, குறித்த காரில் இருந்து Redoine Faïd இறங்கிச் சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
Sarcelles பகுதியில் காவல்துறையினர் வாகனங்களை சோதனையிட்டு வருவதை அடுத்து, வணிக வளாகத்துக்குள் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
Renault Laguna வகை காரை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தவிர ஜோந்தாமினர் அப்பகுதி முழுவதும் Redoine Faïd இனை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
tags :- France culprit Redoine Faid recorded CCTV tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- TIFF திரைப்பட தரப்படுத்தல் பட்டியல்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- பிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.