சிறுநீரகத்தில் 3,000 கற்களுடன் வாழ்ந்த பெண்

0
329
3,000 stones kidney woman lived

சீனாவின் ஜியாங்ஸு மகாணத்தில் உள்ள ஜாங்ஸு பகுதியில் உஜின் என்ற வைத்தியசாலையில், ஷாங்(56) எனும் பெண் தனக்கு தொடர் முதுகுவலி இருப்பதாக தெரிவித்துள்ளார். (3,000 stones kidney woman lived)

மேலும், சில ஆண்டுகளாகவே இந்த முதுகுவலி இருப்பதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அவரது வலது பக்க சிறுநீரகத்தை பரிசோதித்தபோது, அதில் ஏராளமான சிறுநீரக கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஸ்கேன் செய்ததில் ஆயிரக்கணக்கான கற்கள் இருப்பதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக ஷாங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கற்களை வெளியேற்றியுள்ளனர். அந்த கற்களை மருத்துவர்கள் ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு எண்ணியபோது, மொத்தமாக 2,980 சிறுநீரக கற்கள் இருப்பது தெரிய வந்தது. இவ்வளவு கற்களுடன் இந்த பெண் எப்படி சில வருடங்கள் இருந்தார் என்பது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு இந்தியரான தன்ராஜ் என்பவரின் சிறுநீரகத்தில் இருந்து 1,72,155 கற்கள் அகற்றப்பட்டது. அது இதுவரை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tags :- 3,000 stones kidney woman lived

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்