சாவகச்சேரியில் வாள் வெட்டுத் தாக்குதல்; தங்க நகைகள் கொள்ளை

0
825
Sword attack chavakachcheri gold jewelry robbery

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வாள்களுடன் சென்ற கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் உள்ள மூன்று குடியிருப்புக்களுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கியதுடன், பெண்கள், குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர். (Sword attack chavakachcheri gold jewelry robbery)

இந்தச் சம்பவம் நேற்றிரவு சாவகச்சேரி சங்கத்தானை, சாவகச்சேரி வடக்கு, மீசாலை மேற்கு கேணியடி ஒழுங்கை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

அதிரடியாக வீடுகளுக்குள் புகுந்தவர்கள் வாளால் வெட்டி காயப்படுத்திய நிலையில், காயங்களுக்கு உள்ளான மூவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sword attack chavakachcheri gold jewelry robbery