சங்காவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் முக்கிய விடயத்தை வெளியிட்டார் ராஜித சேனாரத்ன!

0
678

தேசிய அரசியலுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் வண்ணம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார அரசியலுக்கு வரவேண்டும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Kumar Sangakkara Political Entry Rajitha Senaratne Statement Tamil News

அதேவேளை குமார் சங்ககார அரசியலுக்கு வருவாராயின் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

குமார் சங்ககார அரசியலுக்கு வரவேண்டும் என பல தரப்புகளும் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் ராஜித சேனாரத்னவின் இந்த அழைப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites