பிரான்ஸில், விதிகளை மீறிய பிரதமரால் ஏற்பட்ட சர்ச்சை!

0
332
France prime minister travel withoutt seat belt case

பிரான்ஸ் பிரதமர் எத்துவா பிலிப் கார் ஒன்றில் இருக்கைப்பட்டி அணியாமல் சென்றுள்ள காட்சி புகைப்படமாக்கப்பட்டு தொலைக்காட்சியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. France prime minister travel withoutt seat belt case

இதற்கு முன்னதாக 80 கிலோமீட்டர் வேக சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரதமர், தற்போது மீண்டும் அதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, Tour de France துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியினை காண சென்ற பிரதமர், கார் ஒன்றின் முன் இருக்கையில் சாரதிக்கு அருகே அமர்ந்திருந்து வீரர்களை பின் தொடர்ந்து பயணித்தார்.

அப்போது அவர் பயணித்த கார் 80 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. அச்சமயம் எத்துவா பிலிப் இருக்கை பட்டி அணிந்திருக்கவில்லை. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரபல செய்தி ஊடகமான France 2 வெளியிட்டுள்ளது.

’90 கி.மீ தூரம் வேகத்தை 80 வீதமாக குறைத்தால், வருடத்துக்கு 300 இல் இருந்து 450 வரையான உயிரிழப்புக்களை தடுக்கலாம்’ என பிரதமர் எத்துவா பிலிப் முன்னதாக தெரிவித்திருந்ததை மேற்கோள் காட்டி, தற்போது ஊடகங்களில் இந்த பிரச்சினையை விவாதித்து வருகின்றனர்.

tags :- France prime minister travel withoutt seat belt case

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்