கேவலமாக நடத்தப்பட்ட முன்னாள் போராளி; மனித உரிமை பேரவையில் முறைப்பாடு

0
782
Former cadre Prabhakaran complaint Human Rights Council

நீதிமன்றத்தின் விளக்கமறியல் உத்தரவுக்கு அமைய யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் போராளியான பிரபாகரன் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். (Former cadre Prabhakaran complaint Human Rights Council)

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான குமாரசாமி பிரபாகரன் எனும் (இடுப்புக்கு கீழ் இயங்காத) மாற்றுத்திறனாளியான தனக்கு சிறைச்சாலையில் அதற்குரிய எந்தவித ஏற்பாடுகளும் காணப்படவில்லை எனறும் மலம், சலம் கழிக்க முடியாது தான் பெரும் அவஸ்தைப்பட்டதாகவும் இது தனது உரிமையை பாதித்துள்ளதாகவும் தெரிவித்தே முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய ஆணையாளர் கனகராஜூடன் தொடர்புகொண்டு வினவிய போது, குமாரசாமி பிரபாகரன் என்பவரின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதுதொடர்பிலும், மற்றும் அரச, பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய அணுகும் வசதிகள் காணப்படுகின்றதா என்பது பற்றியும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Former cadre Prabhakaran complaint Human Rights Council