கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி

0
359
wildfire Greece 40 killed
Wildfire in the island of Chios...epa03364503 Citizens of the village of Lithi find refuge at the beach as a wildfire burns on a mountain next to it, in the island of Chios, Greece, 18 August 2012. EPA/ALEXANDROS VLACHOS

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்குள்ள பீச் பகுதியில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. (wildfire Greece 40 killed)

இதுவரை 104 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தகவல் தெரிவிக்கின்றது.

டென்மார்கை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள் உள்பட பலர் காணாமல் போயுள்ளனர் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது போஸ்னியா நாட்டிற்கான சுற்று பயணத்தினை இரத்து செய்துள்ளார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் நாடு முழுவதும் வீடுகள் சேதமடைந்து உள்ளன. போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. பொது மக்கள் தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.

தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்நாட்டின் மேயர் ஒருவர் 100 வீடுகள் மற்றும் 200 வாகனங்கள் தீயில் எரிந்து கருகியுள்ளன என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

tags :- wildfire Greece 40 killed

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்