தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பாடசாலையொன்றில் மாணவி மீது தாக்குதல்

0
357
student attacked school South Australia

தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பாடசாலையொன்றில் 17 வயது மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. student attacked school South Australia

முதுகுப்புறமாக கத்தி அல்லது வேறொரு கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு 18 வயது மாணவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியாவின் Riverland பகுதியிலுள்ள Renmark பாடசாலையில் இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இரு மாணவிகளை மட்டுமே உள்ளடக்கியது எனவும் ஏனையவர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ள தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர், இது குறித்த விசாரணைகள் நடைபெறுவதாக கூறியுள்ளனர்.

tags :- student attacked school South Australia