பாகிஸ்தானில் குழந்தைகள் தகராறில் 7 பேர் பலி

0
295
Pakistan 7 children dispute killed

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே குழந்தைகள் தொடர்பான தகராறில் இரு குடும்பத்தினர் இடையே வெடித்த மோதலில் 7 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். (Pakistan 7 children dispute killed)

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே உள்ள மீரா சோரேசாய் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நேற்றிரவு பெரியவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில் இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் ஒருதரப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

tags :- Pakistan 7 children dispute killed

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்