பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்

0
690
Extortion gang

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி செல்வந்தர்களிடம் மரண அச்சுறுத்தல் ஏற்படுத்தி, பல இலட்ச ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொள்ளும் குழுவினரை கைதுசெய்வதற்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (Extortion gang Investigations Special Investigative Police)

கொழும்பு மற்றும் பல புறநகர் பிரதேசங்களிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்களை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பயமுறுத்தி, இலட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதாள உலக தலைவர்களின் மேலுள்ள அச்சம் காரமணமாக இவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுப்பதை தவிர்த்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடுவெல பிரதேசத்தில் பணம் படைத்த வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ள நபர், தான் அங்கொடலொக்கா எனக் கூறி இந்த வர்த்தகரிடம் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் கப்பமாக கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Extortion gang Investigations Special Investigative Police