வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு

0
1059
60 year old man calls love 33 year old girl

60 வயதான நபர் ஒருவர் 33 வயதுடைய திருமணமானதும் மூன்று பிள்ளைகளின் தாயுமான பெண் ஒருவரை தன்னுடன் கள்ளக்காதல் தொடர்பு ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். (60 year old man calls love 33 year old girl)

இதனை குறித்த பெண் ஏற்க மறுத்ததனால், வழியில் காத்திருந்து அவளின் பின்பக்க தொடை பகுதியை கத்தியால் வெட்டி காயப்படுத்தி, அவளின் கையடக்கத் தொலைபேசியையும் பறித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மாவனெல்ல, துணுகமை பிரதேசத்தில் கடந்த 20 ஆம் தகதி இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய சந்தேக நபரும் கத்தி வெட்டுக்குள்ளான பெண்ணும் அக்கம் பக்கத்தார் என்றும் தெரியவந்துள்ளது.

தினமும் சந்திக்கும் இந்த பெண் மீது சந்தேக நபருக்கு காதல் ஏற்பட்டுள்ளதால், தன்னை காதலிக்குமாறு 60 வயதான குறித்த நபர் வற்புறுத்தியுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி சில காலத்துக்கு முன்னர் துறவறம் பூண்டுள்ளதனால் குறித்த நபர் தனிமையில் வாழ்ந்துள்ளார்.

காயமடைந்த பெண் மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சி பெற்று வருகின்றார். சந்தேக நபரை மாவனெல்லை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், காயமடைந்த பெண்ணின் கையடக்க தொலைபேசியும் சந்தேக நபரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரை மாவனெல்லை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 60 year old man calls love 33 year old girl