ஈரானில் தொடரும் நில அதிர்வு – 400 பேர் காயம்

0
291
Continuing seismic Iran 400 injured

ஈரானில் நேற்று மூன்று முறை தாக்கிய நில அதிர்வு இன்றும் தொடர்ந்ததால் இதுவரை 400 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Continuing seismic Iran 400 injured)

ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் நேற்று இருமுறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 4.7 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் உண்டான பாதிப்பு தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சில மணி நேரத்துக்கு பின்னர் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கேர்மன்ஷா மாகாணத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவான இந்த நில அதிர்வுகளில் சுமார் 300 பேர் காயமடைந்ததாக கேர்மன்ஷா மாகாண ஆளுநர் ஹவுஸாங் பஸ்வன்ட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 1100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெர்மான் மாகாணத்துக்குட்பட்ட சிர்ச் கிராமத்தை இன்று அதிகாலை பயங்கர நில அதிர்வு தாக்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாக பதிவான இன்றைய நில அதிர்வில் சுமார் நூறுபேர் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது.

சமீபகாலமாக ஈரான் நாட்டின் சில பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கேர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நில அதிர்வுக்கு சுமார் 620 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- Continuing seismic Iran 400 injured

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்