பிரான்ஸில் கால்பந்தாட்ட வீரர்களுடன் பயணிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

0
372
chance travel footballers France

உலகக்கிண்ண போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு வழிகளில் அதன் வெற்றிகளை கொண்டாடி வருகின்றார்கள். இந்நிலையில், 920 கிலோ எடையுள்ள காளை ஒன்றுக்கு உதைப்பந்தாட்ட வீரர் Mbappé இன் பெயர் சூட்டப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. chance travel footballers France

அதனைத் தொடர்ந்து, தற்போது பரிஸ் மெற்றோ ரயில்களில் விளையாட்டு வீரர்களின் பெயர்களை பிரான்ஸ் உதைப்பந்தாட்ட உடையுடன், ஓவியர் ஒருவரின் கைவண்ணத்தில் வரையப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டு வீரர்களான Pavard, Pogba, Lloris, Matuidi, Kanté, Mbappé மற்றும் Griezman ஆகியோரின் பெயர்கள், பிரெஞ்சு உதைப்பந்தாட்ட அணியின் உடையுடன் வரையப்பட்டுள்ளது. தற்போது, இந்த ஓவியங்கள் பயணிகள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக, பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கணனி மூலம் பிரெஞ்சு அணியின் உடையினை மோனாலிசா புகைப்படத்தில் வரைந்து பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- chance travel footballers France

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்