காணாமல் போன சகோதரனை தேடி இவ்வுலகை விட்டு பிரிந்த சகோதரி – வடக்கில் சோகம்

0
414
vavuniya displace people again protest suddenly death girl

காணாமல் போன சகோதரனைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். vavuniya displace people again protest suddenly death girl

இவர் நேற்று முந்தினம் இரவு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் இராசநாயகம் டிலாந்தினி (வயது 24) என்ற விசேட தேவைக்குட்பட்ட பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த யுவதி, நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சகோதரனான இ.ஜெனிஸ்ராஜ் கடந்த 2007 ம் ஆண்டு நீர் கொழும்பு பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.

வவுனியாவில் இடம்பெற்று வரும் காணாமல் போனோர் போராட்டத்தில் குறித்த பெண் தனது தாயுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கலந்து கொண்டு தனது சகோதரனை தேடி போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
vavuniya displace people again protest suddenly death girl

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites