வீட்டிலேயே கள்ளக்காதலனுடன் ஒவ்வொரு இரவும் – கதவை திறந்து பார்த்த கணவனுக்கு நேர்ந்த அவலம்……!

0
2514
Wife Illegal Affair cought husband boy friend wife murder wattala

கொம்மியுனிகேசனில் அறிமுகமான கள்ளக்காதலுனுடன் ஒவ்வொரு இரவும். Wife Illegal Affair cought husband boy friend wife murder wattala

எதிர்பாரதவிதமாக கதவை திறந்து பார்த்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

முச்சக்கர வண்டி சாரதியான தனுஷ் அந்த வருமானத்திலேயே தனது குடும்பத்தின் செலவினங்களை செய்து வந்துள்ளார்.

எந்த வித தீய பழக்கவழக்கங்களும் அற்ற தனுஷ் சில வருடங்களுக்கு முன்னர் தான் உயிருக்கு உயிராக விரும்பிய காதலியை திருமணம் செய்து கொண்டார்.

வத்தளையிலுள்ள தனது அம்மாவின் வீட்டில் தனுஷ் மற்றும் அவரின் மனைவி இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.

13, 4 மற்றும் 3 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார் தனுஷ்.

நீண்டகாலம் முச்சக்கர வண்டியில் கிடைக்கும் வருமானத்தினை கொண்டு தனது குடும்ப செலவினை அதாவது மூன்று பிள்ளைகள் மனைவி மற்றும் தனுஷ்க்க ஆகிய ஐவரின் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குடும்பம் வறுமையில் இன்னல் பட்ட நிலையில், தனுஷ்க்க மற்றும் அவரின் மனைவி இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்ததன் பின்னர் மனைவியை தொழிலுக்கு அனுப்ப இணக்கம் எட்டப்பட்டது.

வத்தளையில் தனுஷ்க்கவின் சகோதரி கொம்மியுனிகேசன் ஒன்றை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

அவரின் வியாபார நிறுவனத்திற்கு பணிபுரிய நபர் ஒருவர் தேவைப்படுவதாகவும் தனுஷின் மனைவியின் சகோதரி தெரிவித்திருந்துள்ளார்.

தனுஷின்மனைவி குறைந்த சம்பளத்திற்கு தனது சகோதரியின் வர்த்தக நிலையத்தில் பணியாற்ற விரும்பி நீண்ட காலம் தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் தனுஷின் மனைவி தனியே கடமையாற்ற வேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளது.

இதன்போது வழமையாக தனது கையடக்க தொலைபேசிக்கு மீள்நிரப்புவதற்காக இளைஞர் ஒருவர் வந்து செல்வது வழக்கமாக காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் வருவதும் அவருடன் புன்னகைத்து கலந்துரையாடுவதனையும் வழக்கமாக கொண்ட தனுஷின் மனைவி அவரை அறியாமலே அவர் மீது காதல் கொண்டு அவர் கோரிய அனைத்திற்கும் இணக்கம் தெரிவித்து வாழ்ந்து வந்துள்ளார்.

இவ்வாறு சிறிது காலம் செல்கையில் தனுஷின் மனைவினை தனியே வெளியில் சந்திக்க அழைத்துள்ளார் அந்த இளைஞர்.

முதலில் மறுப்பு தெரிவித்த தனுஷின் மனைவி முதல் தடவையாக குறித்த இளைஞருடன் வத்தளை புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளார்.

வேலைக்கு செல்வதாக கணவனிடம் கூறி விட்டு சென்றதால் தனுஷ் தனது மனைவி மீது எந்தவித சந்தேகத்தினையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

ஆனால் தனுஷின் மனைவி தொடர்ந்து தனது கள்ளக்காதலுனுடன் தனியே வெளியில் சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தனுஷின் மனைவி தனது கள்ளக்காதலுடன் வீட்டிலேயே தனது நாடகத்தினை அரங்கேற்றியுள்ளார்.

சில காலம் நீடித்ததும் வெளியில் சந்திப்பதனை தவிர்த்துக்கொண்டு இருவரும் வீட்டிலேயே சந்தித்து கணவன் மனைவியாக கள்ள உறவுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

வீட்டில் பகல் வேளைகளில் கள்ளக்காதலனுடன் பல தடவையில் பத்தினித்துவத்தை இழந்த தனுஷின் மனைவி, பின்னர் இரவு வேளைகளிலும் தனது வீட்டிற்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வீட்டில் இரண்டு அறைகள் மற்றும் இடவசதி கொண்ட சாலை என இரண்டு குடும்பங்கள் வசிக்க கூடிய அளவிலான வீடாகவே தனுஷ்ககவின் வீடு காணப்பட்டுள்ளது.

வழமைபோன்று இரவு வேளை உணவினை சாப்பிட்டு விட்டு அனைவரும் நித்திரைக்கு சென்றதன் பின்னர் தனுஷின் மனைவி கழிவறைக்கு செல்வது போன்று அறைக்கு வௌியே சென்று கதவினை திறந்து வைத்து விட்டு வந்து விடுவாள்.

இவ்வாறே தனுஷின் மனைவியின் பல இரவுகள் கழிந்துள்ளன.

அப்பாவியான தனுஷ் இதனை ஒரு போதும் அறிந்திருக்கவில்லை.

இதனைபோன்று ஒரு நாள் தனுஷின் மனைவியின் கள்ளக்காதலன் வீட்டிற்குள் வந்து பிரிதொரு அறையில் காணப்பட்ட கட்டிலில் காத்திருந்தான்.

வழமையை போன்று தனுஷ் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டாரா என நன்கு பரிசோதித்து கொண்ட தனுஷின் மனைவி மெதுவாக நகர்ந்து தனது கள்ளக்காதலன் காத்திருந்த அறைக்கு சென்று விட்டாள்.

சென்று சில மணித்தியாலங்கள் ஆகிவிட்டன, தனுஷின் மனைவியை காணவில்லை.

கள்ளக்காதலனுடன் தனுஷின் மனைவி உடலுறவில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் திடீரென விழித்துக்கொண்ட தனுஷ் மனைவி எங்கே சென்று விட்டாள் என்ற சிந்தனையும் தேடியுள்ளார்.

இந்நிலையில், அறைக்கு வெளியே வந்து பார்த்த போது அருகிலிருந்து பிரிதொரு அறையில் மின் விளக்கு ஒளிர செய்யப்பட்டிருந்தது.

சந்தேகத்துடன் குறித்த அறையின் திறப்பு கதவின் புறத்திலேயே காணப்பட்ட நிலையில், தனுஷ் கதவை திறந்து பார்த்த போது இருவரும் ஒட்டுத்துணியின்றி கள்ள பாலியல் உறவில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தமையை பார்த்து என்ன செய்வதென்று தெரியாது அவ்விடம் விட்டு நகர்ந்துள்ளார்.

சற்று சிந்தித்ததன் பின்னர் இருவரின் அருகே சென்ற தனுஷ் இருவரையும் தகாத வார்த்தை கொண்டு நிந்தித்ததுடன் மனைவியை தாக்கி இனி இவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனைவியிடம் உரையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கள்ளக்காதலன் கட்டிலுக்கு அருகில் காணப்பட்ட இரும்பு கம்பி ஒன்றினை கொண்டு தனுஷ் தலை மீது தாக்குகிறான்.

மயங்கி கீழே விழுந்த தனுஷ ஐ தொடர்ந்து தாக்கிக்கொண்டிந்த கள்ளக்காதலுக்கு தனுஷின் மனைவி விரைந்து சமையல் அறைக்கு சென்று கத்தி ஒன்றை கொண்டு வந்து கொடுத்து இவனை கொன்று விடு என உத்தரவிடுகிறாள்.

சற்றும் சிந்திக்காத கள்ளக்காதலன் தனுஷை சரமாரியாக குத்தி கொலை செய்கின்றான்.

கொலை செய்யப்பட்ட தனுஷின் சடலத்தினை அவரின் முச்சக்கர வணடியில் ஏற்றிக்கொண்டு பிரிதொரு இடத்தில் கொண்டு நிறுத்தி விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

பின்னர் வீட்டில் படிந்திருந்த இரத்த கறைகளை நன்கு அகற்றி சுத்தம் செய்து விட்டு அவ்விடத்திலிருந்து கள்ளக்காதலனை அனுப்பி வைத்துள்ளார்.

கள்ளக்காதலன் தான் வருகை தந்த மோட்டார் சைக்கிள் மூலம் அவனது வீட்டிற்கு சென்று விட்டார்.

மறு தினம் அதிகாலையில் தனுஷின் மனைவி தனது மூத்த பிள்ளையுடன் பொலிஸ் நிலையம் சென்று தனது கணவனை நேற்றிரவு மூவர் வந்து அழைத்து சென்றனர்.

ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை என முறைப்பாடு செய்துக்கொண்டிருக்கையில் வத்தளையில் ஹுனுபிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தினை பார்த்த போது தனுஷின் மனைவி கூறியதற்கமைய சடலமாக மீட்கப்பட்ட நபர் தனுஷ் என கண்டறிந்துள்ளனர்.

பின்னர் மனைவி மீது பொலிசார் சந்தேகம் கொண்ட நிலையில், தனுஷின் வீட்டிற்கு அருகிலிருந்த சி சி ரீ வி புகைப்;பட கருவிகளின் காணொளிகளை பெற்றுக்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வீடியோ பதிவுகளை ஆய்வு செய்கையில் முன்னைய தினம் இரவு தனுஷின் மனைவி அவரின் கள்ளக்காதலன் இருவரும் முச்சகக்கர வண்டியில் சென்றமை பின்னர் வீடு திரும்பியமை அனைத்து விடயங்களும் பதிவாகியுள்ளன.

இரகசியமான முறையில் ஆதாரங்களை சேமித்துகொண்ட பொலிசார் தனுஷின் வீட்டினை மோப்ப நாய் கொண்டு விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது தனுஷின் இரத்த கறைகள் படிந்திருந்த சில தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதிரடியாக சடலம் வீட்டில் வைக்கப்;பட்டிருந்த வேளையிலேயே தனுஷின் மனைவி பொலிசாரல் கைது செய்யப்படுகின்றார்.

இறுதி சடங்கிற்கேனும் அவருக்கு அவகாசம் வழங்காத பொலிசார் உடனடியாக பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.

சில மணித்தியாலங்களில் அவரின் கள்ளக்காதலனும் கைது செய்யப்படுகின்றார்.

இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மனைவி வழங்கிய வாய்மூல சாட்சியமே மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

தனுஷின் மனைவி அவளின் கள்ளக்காதலி இருவருக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்கல் செய்து மஹர நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதற்கமைய குறித்த இருவரையும் தொடர்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Wife Illegal Affair cought husband boy friend wife murder wattala

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites