சட்டவிரோதமாக எத்தனோல் வைத்திருந்த மூன்று பேர் கைது

0
408

(Three suspects arrested Ja ela extra income 60 million illegally)

சட்டவிரோதமாக விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய எத்தனோலுடன் மூன்று சந்தேகநபர்கள் ஜா-எல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் நேற்றிரவு நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் போது குறித்த எத்தனோல் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த எத்தனோல் கொள்கலன்கள் இலங்கை சுங்கத்திடம் இருந்து சட்ட ரீதியாக ஏலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவை அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு அல்லாமல் வேறு பிரதேசத்திற்கு விநியோகத்திற்காக எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போதே அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

ரகசியமாக கிடைத்த தகவல் ஒன்றின் படி உளவாளி ஒருவரை அனுப்பி எத்தனோல் கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

(Three suspects arrested Ja ela extra income 60 million illegally)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites