கம்பளையில் கொடூரம் : 45 வயதுடைய மகளை கொலை செய்து எரித்த தாய்..!

0
1215

தாய் ஒருவர் தனது 45 வயதுடைய மகளை கொலை செய்து எரித்த சம்பவம் கம்பளையில் பதிவாகியுள்ளது.(mother killed daughter gampola)

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கம்பளை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய தாய் ஒருவர், மாற்றுத் திறனாளியான தனது மகளை அன்பாக பராமரித்து வந்துள்ளார்.

எனினும் கடந்த 18 ஆம் திகதி இரவு, மகளை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதோடு தீயிட்டு எரித்துள்ளார்.

19 ஆம் திகதி தனது மகள் இறந்து விட்டதாக அயலவர்களிடம் குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

மகளின் சடலத்தில் தீக்காயங்கள் இருப்பதை அவதானித்த பிரதேச மக்கள் சந்தேகம் கொண்டு உடனடியாக பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாயை கைது செய்துள்ளனர்.

மிகவும் அன்பாக மகளை பராமரித்து வந்த தாய் எதற்காக மகளை கொலை செய்தார் என பிரதேச மக்கள் சந்தேக வெளியிட்டுள்ளனர்.

 

Tags:mother killed daughter gampola,mother killed daughter gampola,mother killed daughter gampola,