என்ன எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை வழங்குவேன் : ஜனாதிபதி மீண்டும் அதிரடி

0
1258
maithripala sirisena death penalty

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனையை வழங்கும் தீர்மானத்தில் எந்த மாற்றமுமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.(maithripala sirisena death penalty)

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.
18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்கள் நேற்று எனக்கு கிடைக்கப்பெற்றன.
எனவே இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்ற எந்த எதிர்ப்புகள் வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்றார்.

போதைப்பொருள் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றினால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என உலகநாடுகளில் சில எச்சரிக்கை விடுத்திருந்தன.

அத்துடன் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என இலங்கையிலும் பலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மீண்டும் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

Tags:maithripala sirisena death penalty,maithripala sirisena death penalty,maithripala sirisena death penalty,