அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க கப்பம் கோரிய அரசாங்க உத்தியோகத்தர் கைது

0
333
government person arrest corruption spot action police pannipitiya

கப்பம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். government person arrest corruption spot action police pannipitiya

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிபிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை 5.30 அளவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிலிருந்து வர்த்தகர் ஒருவர் 10 வருடங்கள் பழமையான வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து வநியோகித்துள்ளார்.

அதற்கான அனுமதி பத்திரத்தினையும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்திடம் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் குறித்த அனுமதி பத்திரத்தினை புதுபிக்க இரண்டு இலட்சம் ரூபாய் கப்பம் கோரியதாகவும் கப்பம் வழங்க மறுக்கும் பட்சத்தில் அதனை இரத்து செய்வதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வர்த்தகர் இலஞ்சம் தருவதாக தெரிவித்து அதிகாரியை வரழைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளையும் வரவழைத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
government person arrest corruption spot action police pannipitiya

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites