பெண் ஒருவரை மோசமாக தாக்கிய மக்ரோனின் மெய்பாதுகாவலர்!

0
329
Magrón's bodyguard hit woman badly

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மெய்பாதுகாவலர் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை காலை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். Magrón’s bodyguard hit woman badly

மே 1, மேதின கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை Alexandre Benalla மிக மோசமாக தாக்கிய காணொளி கடந்த புதன்கிழமை வெளியானது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மக்ரோனின் மெய்பாதுகாவலர் பெண் ஒருவரையும், ஆண் ஒருவரையும் மிக மோசமாக தாக்கியுள்ளார். குறிப்பாக குறித்த ஆண் கெஞ்சி கேட்டும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்த சம்பவத்தின்போது அவருடன், உடனிருந்த மூன்று காவல்துறையினரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் மெய் பாதுகாவலராக பணி புரிந்த Alexandre Benalla இதற்கு முன்னர் 15 நாட்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.

தற்போது நிரந்தரமாக பணி நீக்கம் செய்வது குறித்து தாம் தீர்மானம் எடுத்துவருவதாக எலிசே மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- Magrón’s bodyguard hit woman badly

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்