கரடியினால் இராணுவச் சிப்பாய்க்கு ஏற்பட்ட அவலம்; முல்லைத்தீவில் சம்பவம்

0
650
Bear attack army soldier hospital

முல்லைத்தீவு தந்திமுறிப்பு காட்டில் கரடியொன்று தாக்கியத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(Bear attack army soldier hospital)

தந்திமுறிப்பு காட்டுக்கு அருகிலுள்ள முகாமில் கடமையாற்றி வந்த இராணுவச் சிப்பாய் அருகிலுள்ள காட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, காட்டில் இருந்த கரடியொன்று இராணுவச் சிப்பாய் மீது பாய்ந்து அவரது முகம் மற்றும் தலையில் தாக்கியுள்ளது.

கரடியுடன் போராடிய இராணுவச் சிப்பாய் உயிர் தப்பி முகாமுக்குச் சென்றுள்ளார். கரடி தாக்கியத்தில் சிப்பாய் முகம் மற்றும் தலை பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

முதலில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் மேலதிக சிகிச்சைக்காக பதவிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Bear attack army soldier hospital