நுவரெலியா, வெலிமடை நகரத்தில் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(sri lanka police officer arrested heroin )
இன்று காலை கைதுசெய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 3 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் பேததைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் பணிபுரியும், வெலிமடை மீரகவத்த, கொஸ்ககஹராவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை நகரத்தில் ஹெரோயின் போதைபொருள் விநியோகத்தில் நபரொருவர் ஈடுபட்டுள்ளதாக வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணைகளை முன்னெடுதுள்ள வெலிமடை பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Tags:sri lanka police officer arrested heroin ,sri lanka police officer arrested heroin ,sri lanka police officer arrested heroin ,