100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி

0
882
Sri Lankan refugee robbed 100 pound jewelry

கடந்த 15 வருடங்களாக திருச்சி பொலிஸாரிடம் சிக்காமல் இருந்த இலங்கை தம்பதியினர் விமானம் மூலம் இலங்கைக்கு தப்பிக்க முயற்சித்த போது, பொலிஸாரிடம் வசமாக மாட்டியுள்ளனர். (Sri Lankan refugee robbed 100 pound jewelry)

கணவன் மனைவியான இவர்கள் 100 பவுண் நகைகளுக்கு மேல் திருடியுள்ளதாக பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கைதான இலங்கை அகதிகள் இருவரும் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவரம்பூர் துவாக்குடியை அடுத்துள்ள வாழவந்தான் கோட்டையில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் 50 வயதான இலங்கை அகதியான தேவகுமாரி வட்டி கொடுத்து தொழில் செய்து வருகின்றார்.

இவர் கடந்த 4 ஆம் திகதி அய்யம்பட்டி வீதியில் நடந்து செல்லும் போது, 3 பேர் கத்தியை காட்டி எச்சரித்து, இவரிடம் இருந்து 10 பவுண் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து துவாக்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களின் நண்பரான ராஜா என்கின்ற கெட்டியான் பாண்டி என்பவன் நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்தவர் என்றும் கணவன் மனைவியாக தலைமறைவாகி இருப்பதும் பொலிஸாருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து தீவிர விசாரணை முன்னெடுத்தனர்.

கடந்த 2 மாதங்களாக பூட்டிய வீடுகளில் நகைகளை திருடுவது மிக அதிகரித்து வந்தது.

விழிப்புணர்வுடன் இருந்தும் திருடனுக்கு பூட்டிய வீடு எப்படி சரியாக தெரிகின்றது என்கிற கேள்விக்கு விடை கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடத்தில் அருகே உள்ள தெருக்களில் வீடு வாடகைக்கு வந்திருப்பது தெரியவந்தது.

அவ்வாறு வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை கண்காணித்து அந்த வீடுகளில் தங்கள் கைவரிசைகளில் திருடியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் தெரியப்படுத்தியிருந்த நிலையில் இலங்கைக்கு தப்பிச்செல்வதற்கு ஏற்பாடு செய்த போது, தனிப்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sri Lankan refugee robbed 100 pound jewelry