மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு

0
1045
Mahinda Rajapaksa visits New Delhi

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதுடல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (Mahinda Rajapaksa visits New Delhi invited subramanya swamy)

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டே, மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பின் பொதுக்கூட்டம் சுப்பிரமணிய சுவாமி தலைமையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றுமாறு மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து தேசப் பற்றாளர்களையும் பங்கேற்குமாறும், தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணிய சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mahinda Rajapaksa visits New Delhi invited subramanya swamy