யாழ்ப்பாணத்தில் இரவில் மிரட்டும் பேய்கள்! விடியும் வரை தவித்த பொலிஸார்!

0
958

யாழ்ப்பாணம் அச்சுவேலி  பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்குள் இரவு 10.30 மணியளவில் ஒரு மர்ம குழு நுழைந்தது போல, அங்கிருந்த பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Jaffna Atchuvely People Fearing Ghost Complaint Police

இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்ய சென்ற வீட்டின் உரிமையாளருக்கும் பொலிஸாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் அமானுஷ்ய சக்திகளின் செயற்பாடுகள் உள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஒரு சில அமானுஷ்ய சக்திகள் வீட்டிற்கு புகுந்து இவ்வாறான பாரிய சேதத்தை ஏற்படுத்தயுள்ளதாகவும், சாதாரண மனிதர்களினால் இவ்வாறான சேதத்தை ஏற்படுத்த முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னமும் அமானுஷ்ய சக்திகள் வீட்டில் உள்ளதாக நம்புவதாகவும், இதனால் வீட்டிற்கு செல்ல அச்சமாக உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இவர்க்ளின் கருத்தை கோபத்துடன் மறுத்த பொலிஸார் , அவ்வாறான அமானுஷ்யங்கள் இல்லை என்பதனால் வீட்டிற்கு செல்லுமாறும், வீட்டில் சென்றால் தான் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கை செய்து விசாரணை மேற்கொள்ள முடியும் எனவும், பொலிஸார் குறிப்பிட்டு்ளனர்.

இரவு ஏற்பட்ட இந்த சம்பவத்தின் பின்னர் வீட்டில் சென்ற வீட்டு உரிமையாளர் விடியும் வரை வேறு வீடு ஒன்றிலேயே தங்கியிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமானுஷ சக்திகளின் அட்டகாசம் உண்மையாக இருக்கும் என்று பலரும் நம்புவதால் அங்கு பெரும் பீதிநிலை உருவாகியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites