மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை

0
552
Action dismiss officer issued death penalty list

மரண தண்டனை நியமிக்கப்பட்ட 18 சிறைக்கைதிகளின் பெயர் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்ட சிறைச்சாலை அதிகாரியை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. (Action dismiss officer issued death penalty list)

இந்த நெறிமுறையில்லாத செயலில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரியை பணி நீக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலை மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் மங்கலிகா தெரிவித்துள்ளார்.

இந்தப் பெயர் பட்டியலை கண்டறிந்தது நேற்றைய தினமே என்றும் இதுவொரு முக்கியமில்லாத பட்டியல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பும் முன்னர் நீதிமைச்சினால் பூர்த்தி செய்வதற்கு பல பணிகள் உள்ளது எனவும் அவ்வாறான வேளையில் இந்தப் பெயர் பட்டியல் ஊடகங்களால் வெளியிட்டிருப்பது ஒரு பாரதூரமான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பெயர் பட்டியல் தன்னிடம் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடக பேச்சாளர் கமிஷனர் துஷார உபுல்தெனியவிடம் வினவிய போது, இந்தப் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு தனது திணைக்களதிற்கு தேவை இல்லை எனவும் எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Action dismiss officer issued death penalty list