லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

0
279

உலக புகழ் பெற்ற லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை தொடங்குவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. (Tamil seat University London)

ஏற்கனவே லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறை இயங்கி வந்தது. ஆனால் மாணவர் சேர்க்கை குறைந்ததால் 1995-களில் தமிழ் துறை மூடப்பட்டது. இந்நிலையில் அங்கு மீண்டும் தமிழ் துறையை கொண்டு வருவதற்காக தமிழ் அமைப்புகள் கடந்த வருடம் கார்த்திகை மாதம் முதல் எடுத்து வந்த விடாமுயற்சியின் பலனாக பல்கலைக்கழகம் அதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

தமிழ்மொழி குறித்த ஆய்வுக்கான துறையை ஏற்படுத்துவதில் பெருமை கொள்வதாக லண்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும் ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இருக்கை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அதற்காக 54 கோடி ரூபாய் நிதி திரட்டும் பணியில் தமிழ் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

2021ம் ஆண்டுக்குள் தமிழ் இருக்கையை நிறுவ வேண்டும் என இதற்காக பாடுபடும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

tags :- Tamil seat University London

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************