இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ள செய்தி!

0
625

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய பங்கு காலி கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு. Sri Lanka Galle Cricket Ground

இலங்கை அணிக்கு மிகவும் ராசியான மைதானம் இதுவாகும். இதுமட்டுமன்றி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென பெயர் பெற்றது இந்த மைதானம்.

இலங்கையில் நடைபெறும் எந்தவொரு டெஸ்ட் தொடரினதும், முதல் போட்டி இங்கேயே நடைபெறுகின்றது.

எனினும் , காலி மைதானத்தை பாடசாலை கிரிக்கெட் போட்டிகளுக்கு மாத்திரம் பயன்படுத்தவும், காலியில் வேறொரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க அரசு தீர்மானித்துள்ளது.

இந்த முடிவுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலை தளங்கள் ஊடாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பலர் தமது கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.