இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 2ம் தேதி, துல்ஹாதா 4ம் தேதி,
18.7.18 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 8:38 வரை;
அதன் பின் சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் மதியம் 2:37 வரை;
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்த, மரணயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
பொது : சஷ்டி விரதம், முருகன் வழிபாடு, கரிநாள்.
.
மேஷம்:
திட்டமிட்டு செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.
ரிஷபம்:
பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். நல்லவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் திருப்தியளிக்கும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும்.
மிதுனம்:
உறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.
கடகம்:
நற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். .
சிம்மம்:
நற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.
கன்னி:
பிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் ஆதரவு கிடைக்கும். . வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை அதிகரிக்கும்.
துலாம்:
எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
விருச்சிகம்:
நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.
தனுசு:
எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.
மகரம்:
இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
கும்பம்:
அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்
மீனம்:
நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்..
மேலும் பல சோதிட தகவல்கள்
-
உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா
-
பல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…!
-
பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
-
வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
-
இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
-
காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
-
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
-
உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
-
வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்