{ Non vegetarian food digested }
சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை.. அவை அசைவ உணவில் இருக்கும் நச்சுத்தன்மைகளையும் போக்க கூடியவை.. அத்தகைய உணவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.
அசைவ உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது? உணவை பார்த்தவுடன் பாய்ந்து மேய்ந்து விடும் சிலர், சாப்பிட்டு முடித்த பின் படும் துயரம் தான் அஜீரண கோளாறு. செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன. சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை.. அவை அசைவ உணவில் இருக்கும் நச்சுத்தன்மைகளையும் போக்க கூடியவை.. அத்தகைய உணவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.
வெந்நீர்:
அசைவம் சாப்பிடும் போது குளிர்ந்த தண்ணீர் குடித்தால், அது உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்கிறது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நீங்கள் சாப்பிட்ட உடன் மிதமான சூடுள்ள நீரை பருகுங்கள் இதனால் உணவு செரிப்பது எளிமையாகிறது. கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், காலையில் மலப்பிரச்சனை ஏற்படாமல் எளிதாகிறது.
பப்பாளி:
பப்பாளியில் அதிகளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. இது உங்களது செரிமான பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது. இந்த பப்பாளியை நீங்கள் மிகச் சிறிதளவு எலுமிச்சை சாறை பிளிந்து சாப்பிடலாம் அல்லது ப்ரூட் சாலட்டுகளில் பப்பாளியை சேர்த்து சாப்பிடலாம்.
சீரகம்:
அசைவ உணவு செரிக்காமல் அவஸ்தைப்படும் போது, சீராக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும். மேலும் இது, மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
புதினா ஜூஸ்:
புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. அசைவ சாப்பாட்டிற்கு பின் புதினா மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸ் குடித்தால், அவை செரிமான பிரச்சனையை சரி செய்வதுடன், அவை வாயுபிடிப்பு, வயிற்று வலி, வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க உதவும்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியுள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உங்களது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுக்கிறது. இந்த அமிலத்தன்மை அதிகரித்தால் அது வயிற்றில் எரிச்சலை உண்டாகும். நெஞ்செரிச்சலையும், செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும்.
க்ரீன் டீ:
சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், 50 மி.லி கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் எளிதாகும். காலை மாலை என ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ என அருந்தலாம்.