சாவகச்சேரியை சேர்ந்தவருக்கு 6 கோடி ரூபா ஜாக்பொட் பரிசு

0
573
jaffna chavakachcheri lottery 6 crore

சாவகச்சேரியில் உள்ள நபர் ஒருவருக்கு 6 கோடி 11 இலட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.

எனினும் வெற்றி பெற்ற நபரின் பெயர் விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

சாவகச்சேரியில் உள்ள தேசிய லொத்தர் சபையின் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட சீட்டுக்கு 6 கோடி 11 இலட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவரிடம் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.

அதிர்ஷ்ட லாபச் சீட்டை வாங்கிய நபர் குறித்த வெற்றி சீட்டை தேசிய லொத்தர் சபைக்கு வழங்குவதன் மூலம் தனது வெற்றிப் பணத்தொயை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: jaffna chavakachcheri lottery 6 crore,jaffna chavakachcheri lottery 6 crore,jaffna chavakachcheri lottery 6 crore,