‘மரண தண்டனை” : தயக்கத்துடன் பதிலளித்தார் ரணில்

0
797
death penalty ranil wickremesinghe

போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்கும் சட்­டத்தை அமு­லுக்கு கொண்டு வரு­வதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் வெளியிட்­டுள்ளார். (death penalty ranil wickremesinghe)

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் கூடி­யது. இந்த கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் முன்­ன­ணியின் பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்து கொண்­டனர்.

இதன்­போது ஐக்­கிய தேசி­ய ­கட்­சியின் தொழிற்­சங்க செய­லா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான அஜித் பீ பெரேரா எழுந்து நாட்டில் மரண தண்­ட­னையை அமு­லுக்கு கொண்டு வரு­வது தொடர்பில் பிர­த­மரின் நிலைப்­பாட்டை வின­வினார்.

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பி­டு­கையில்,

மரண தண்­ட­னையை அமு­லுக்கு கொண்டு வரு­வதில் பெரும் சிக்கல் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் விரி­வாக ஆராய வேண்­டி­யுள்­ளது. மரண தண்­டனை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றியம் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளது. ஆகவே இந்த சட்டம் அமு­லுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலு­கைக்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்­படும். ஆகவே இது தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தியே முடிவு எடுக்க வேண்டும் என கூறி­யுள்ளார்.

பாரி­ய­ள­வி­லான போதைப்­பொருள் கடத்தல் கா­ரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்க வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது யோசனை முன்­வைத்­த­துடன் அந்த யோசனை ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. இந்­நி­லையில் அந்த சட்­டத்தை அமு­லுக்கு கொண்டு வர வேண்டும் என அஸ்­கி­ரிய, மல்வத்து பௌத்த பீடங்கள் உட்பட பௌத்த அமைப்புகள் பலதும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டு வரவேண்டாம் என்று கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:death penalty ranil wickremesinghe,death penalty ranil wickremesinghe,death penalty ranil wickremesinghe,