முகத்தை அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் ஆபத்தாம்: பிரபல நிறுவனம் எச்சரிக்கை

0
612
microsoft facial recognition technology risks

(microsoft facial recognition technology risks)
Facial Recognition எனப்படும் முகத்தை அடையாளம் கண்டு இயங்கும் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதை அமெரிக்க அரசு நெறிமுறைபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் போலீசாருக்கு மிகவும் உதவும் என்றாலும், வேறு சிலர் அதை தவறாக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாக மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நபரின் அனுமதியின்றியே அவரை சோதனைக்கு உட்படுத்த முடியும் என்று கூறியுள்ள மைக்ரோசாஃப்ட் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்துக் கூட, இதை இயக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால், இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய குற்றச்செயல்களுக்கும் உதவக் கூடியதாகி விடும் என்பதால், அதன் பயன்பாட்டை வரைமுறைபடுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

microsoft facial recognition technology risks

Tamil News