முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை

0
701
Gotabhaya Rajapaksa said ready contest upcoming presidential election

(Gotabhaya Rajapaksa said ready contest upcoming presidential election)

எதிர்பரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் எனது சகோதரர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனவே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினால் அதில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

நான் பொது பலசேனாவின் ஆதரவாளர் என்ற தவறான கருத்து தற்போது பொய்யாகியுள்ளது.

எனவே, தமிழ் பேசும் மக்களும் கூட இந்தமுறை எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதேபோன்று, முஸ்லிம்கள் எனக்கு வாக்களிப்பார்கள். மகிந்த ராஜபக்சவுக்காக தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்.

தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், மகிந்த ராஜபக்ச தனது குடும்ப வட்டத்துக்குள் தமிழ் உறவுகளைக் கொண்டிருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அவர் வடக்கு, கிழக்கில் முக்கியமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

எனவே, நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும், அமைதியாகவும், கௌரவமாகவும் வாழுகின்ற நிலையை உறுதி செய்வேன் என்று அவர் குறிப்பிட்டார்

(Gotabhaya Rajapaksa said ready contest upcoming presidential election)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites