சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்

0
680
bold act 71 year old Elderly woman

சம்பளமின்றி அலுகோசு பதவியை (மரண தண்டனை நிறைவேற்றுநர்) ஏற்றுக் கொள்ளத் தயார் என 71 வயதான மூதாட்டி ஒருவர் கூறியுள்ளார். (bold act  71 year old Elderly woman)

அலுகோசு பதவிக்கு ஆட்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரிய நிலையிலேயே சிலாபம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த எல்.பி. கருணாவதி என்ற 71 வயதான மூதாட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றும் பணியை பொறுப்பேற்று கொள்ள தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டின் எதிர்காலத்தை சிதைக்கும் இவ்வாறான குற்றவாளிகளை தராதரம் பாராது அழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுவர் பாலியல் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தர்ம தீவாக இருந்த நாடு தற்போது மரண தீவாக உருமாற இடமளிக்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; bold act 71 year old Elderly woman