நாட்டில் அனைத்து பயிர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த க்லைபொஸேட்டின் பூச்சிநாசினி தடையை உடனடியாக நீக்குவதாக பூச்சிக்கொல்லிகள் தொடர்பான பதிவாளர் ஜெனரல் சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார். (Action remove ban glyphosate pesticides)
ரஜரட்ட விவசாயிகளும் மக்களும் சிறுநீரக நோய் மற்றும் பல்வேறு தொற்று நோய்களினால் அகால மரணமடைந்துள்ளமைக்கு அதிக நச்சுப் பொருட்கள் அடங்கிய விவசாய இரசாயன பொருட்கள் உபயோகிப்பதனால் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் க்லைபொஸேட் பயங்கரமான நச்சுப்பொருள் எனவும் புற்றுநோய் ஏற்படுவதற்கு இந்த இரசாயன பொருள் முக்கியமான காரணம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகத்தில் பல நாடுகள் இதனை தடைசெய்துள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் மற்றும் பல நிபுணர்கள் அறிவித்ததை அடுத்து இந்த அரசு பதவியேற்ற பின்னர் க்லைபொஸேட் தடை செய்யப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும் பல சர்வதேச நிறுவனங்கள் திருட்டுத்தனமாக இதனை இறக்குமதி செய்திருந்ததாகவும் தற்போதுள்ள அரசில் பிரபல அமைச்சர் இருவர் இந்த க்லைபொஸேட்டின் தடை நீக்குவதற்கு பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
சுகாதார ஊடச்சத்து மற்றும் உள்நாட்டு தொடர்பான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கையில், அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக தங்களின் விருப்பப்படி க்லைபொஸேட்டின் தடை நீக்குவதற்கு பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் ஜெனரலுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அனைத்து பயிர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை 2017 ஆம் ஆண்டில் பெருந்தோட்டத் தொழில் அமைச்சரினால் தேயிலை மற்றும் தென்னை பயிர்களுக்கு மாத்திரம் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த தடையை நீக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தடையை முழுதாக நீக்கினால் மக்களின் ஆதரவுடன் இந்த முடிவை மாற்ற பாரிய நடவடிக்கை எடுக்க போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- வவுனியாவில் மாணவி சடலமாக மீட்பு; தற்கொலையா கொலையா? பொலிஸார் விசாரணை
- பாதாள உலகுக்கு சிம்ம சொப்பன அதிகாரியை கொலை செய்தால் 50 லட்சம் பணம் – டுபாயிலிருந்து பேரம்
- அலுகோசு பதவிக்கு கோத்தபாயவே சிறந்தவர்! பிரதி அமைச்சர் கேலிப்பேச்சு!
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- அபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Action remove ban glyphosate pesticides