உலகக் கோப்பை யாருக்கு? பிரான்ஸ் 2 ஆம் முறை வெல்லுமா – புதிய சாதனைக்கு குரேஷியா தயாரா?

0
980
football will croatia beat france win world cup tamil news

(football will croatia beat france win world cup tamil news)

ஃபிபா உலகக் கோப்பை இறுதி கட்ட கிளைமாக்ஸை தொட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபீஃபா போட்டியின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன.

20 ஆண்டுகளுக்குப் பிறகு 2 வது முறையாக கோப்பையை வெல்ல பிரான்ஸ் எதிர்ப்பார்ப்புடன் துடிப்புடன் உள்ளது.

அதேவேளை, கோப்பையை முதல் முறையாக வென்று சாதிக்க குரேஷியா உத்வேகத்துடன் உள்ளது.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் திகதி ஆரம்பித்தன.

ஒரு மாதமாக பல்வேறு அதிர்ச்சிகள், ஆச்சரியங்களை சந்தித்த நிலையில், 21 வது ஃபிபா உலகக் கோப்பை கிளைமாக்ஸை நெருங்கியுள்ளது.

மாஸ்கோவில் நாளை இரவு 8.30 மணிக்கு நடக்கும் இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மிகவும் வேகத்துடன் உள்ள குரேஷியாவும் மோதவுள்ளன.

தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடொன்றே கோப்பையை வெல்ல உள்ளது.

2006 ல் இத்தாலி, 2010 ல் ஸ்பெயின், 2014 ல் ஜெர்மனி அணிகள் கோப்பையை வென்றன.

இந்த முறை வெல்லப் போவது யார் என்பது நாளை இரவு தெரியும்.

பிரான்ஸ் கலக்கல்

இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது.

பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது.

நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்றது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை 2-0 என வென்றது. அரை இறுதியில் பெல்ஜியத்தை 1-0 என வென்றது.

மூன்றாவது முறையாக பைனலில் விளையாடும் பிரான்ஸ், 1998ல் கோப்பையை வென்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம் – தமிழ்மைகேல்

(football will croatia beat france win world cup tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites