பிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை!!!

0
917
fifa world cup final won france mass celebration eiffel tower

(fifa world cup final won france mass celebration eiffel tower)

பிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றதைப் போலவே, அந்த அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ்க்கும் இது இரண்டாவது சாதனையாகும்.

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை – பிரான்ஸ் வெற்றிகொண்டது.

இதன் மூலம் 1998 க்குப் பிறகு இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

அதே நேரத்தில் அந்த அணியின் பயிற்சியாளரான டிடியர் டெஸ்சாம்ப்ஸ்க்கும் இது இரண்டாவது உலகக் கோப்பையாகும்.

1998 ல் பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்ற போது, அணியில் அவர் வீரராக இருந்தார்.

தற்போது பயிற்சியாளராக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முன் பிரேசிலின் மரியோ ஜகாலோ மற்றும் ஜெர்மனியின் பெக்கன்பியூர் மட்டுமே வீரராகும், பயிற்றுவிப்பாளராகவும் உலகக் கோப்பையை வென்றுள்ளனர்.

தற்போது அந்த வரிசையில் டெஸ்சாம்ப்ஸ் இணைந்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை பிரான்ஸ் மக்கள் வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர்.

ஈபிள் டவர் முன்பாக பல ரசிகர்கள் கூடி உள்ளனர். ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டி இன்று இடம்பெற்றது.

இதில் பிரான்ஸ் – குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அதிரடியாக ஆடியது.

குரேஷியாவின் சிறு சிறு தவறுகளை கூட எளிதாக பயன்படுத்திக் கொண்டது.

கடந்த ஒரு மாதமாக இதற்கான கொண்டாட்டங்கள் மற்றும் போட்டிகள் இடம்பெற்றம்.

இந்த போட்டியை காண பிரான்சில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முக்கியமாக ஈபிள் டவர் முன்பாக பல ரசிகர்கள் கூடினார்கள். இவர்கள் போட்டியை காண பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த போட்டியை காண ஈபிள் டவர் முன்பு மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள்.

இவர்களின் கரகோஷ வீடியோ பெரிய வைரல் ஆகியுள்ளது.

(fifa world cup final won france mass celebration eiffel tower)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites