எதிர்வரும் 20 இல் விஜயகலா தொடர்பில் இறுதி தீர்மானம்!

0
479
UNP Discussing Vijayakala LTTE Statement Issue Final Decision 20th

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என கூறியமை தொடர்பில் அவரின் கட்சி பலவழிகளில் ஆராய்ந்து வருகின்றது. UNP Discussing Vijayakala LTTE Statement Issue Final Decision 20th

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரின் கருத்துக்களின் படி,

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் எடுக்கப்படவுள்ளது.

விஜயகலா தரப்பில் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளது.

விஜயகால மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் பலர் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்ற போதிலும், விஜயகலா அரசியலமைப்பை மீறும் வகையில் கருத்து வெளியிட்டாரா என்பது தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites