இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
647
Today Horoscope 13-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, ஷவ்வால் 28ம் தேதி,
13.7.18 வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி காலை 9:17 வரை;
அதன் பின் வளர்பிறை பிரதமை திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 9:02 வரை;
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.

.

மேஷம்:

பேச்சு,செயலில் புத்துணர்வு வெளிப்படும். தொழிலில் நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். லாபம் உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். பிள்ளைகள் உதவிகரமாக நடந்து கொள்வர்.

 

ரிஷபம்:

புதிய விஷயங்களை ஆர்வமுடன் அறிந்து கொள்வீர்கள். வாகன அனுபவம் இனியதாக அமையும். தொழில்,வியாபாரத்தில் முன்னேற்றம் பெற நவீன மாற்றம் செய்வீர்கள். லாபம் சீராக இருக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

மிதுனம்:

நண்பர்களின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் உபரி பணவருமானம் கிடைக்கும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்:

முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். தவிர்க்க இயலாத வகையில் திடீர் செலவு ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்:

எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். எளிமையானவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி பெறுவர்.

கன்னி:

வழக்கத்திற்கு மாறான திடீர் பணியால் சிரமப்படலாம். தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம்:

மனதில் தெய்வீக சிந்தனை வளரும். உறவினர்களுக்கு தகுந்த உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரம் சிறந்து வாழ்க்கைத் தரம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும் .குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

விருச்சிகம்:

உங்கள் தேவையை நிறைவேற்றுவதில அக்கறை கொள்வீர்கள். மற்றவரின் அதிருப்தி வராதபடி செயல்படவும். தொழிலில் இலக்கு நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். புத்திரரின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.

தனுசு:

சிலர் சுயலாபத்திற்காக உங்களுக்கு உதவ முன்வருவர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.ஆதாயம் பன்மடங்கு உயரும். பணம், நகையை விழிப்புடன் கையாளவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மகரம்:

எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படவும். தொழிலில் கூடுதல் உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராகும். உடல்நிலை சீர்பெறும். பெண்கள் பணம், நகை ஆகியவற்றை கவனமுடன் பாதுகாக்கவும். நண்பர் சந்திப்பால் நன்மை காண்பீர்கள்.

கும்பம்:

பேச்சில் இனிமை காண்பீர்கள். நல்லவர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். சேமிக்கும் விதத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

மீனம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்