கொழும்பில் இளைஞர்களை கடத்திய வாகனம் பற்றி தகவல் தர கடற்படை மறுப்பு!

0
525
Colombo Young Men Kidnap Vehicle Navy Refuse Give Detail

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சிறிலங்கா கடற்படையால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்களை சிறிலங்கா கடற்படை இன்னமும் வழங்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். Colombo Young Men Kidnap Vehicle Navy Refuse Give Detail

சிறிலங்கா கடற்படை தலைமையகம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்கள் இந்த விசாரணைக்குத் தேவைப்படுகின்ற போதும் அதனை இன்னமும் வழங்கவில்லை என்று கோட்டே நீதிவானிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று தெரிவித்தனர்.

அந்த வாகனம் முற்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கவில்லை.

அத்துடன், 2008ஆம் ஆண்டு நடந்த இந்தக் கடத்தல்கள் தொடர்பான, பிரதான சந்தேக நபரான கடற்படையின் முன்னாள் லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியின் கீழ் இருந்த கடற்படையினர் பயன்படுத்திய உந்துருளிகள் தொடர்பான எந்த விபரங்களும் தரப்படவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites